ப்ளூசட்டை மாறன் இயக்கியுள்ள ‘ஆன்டி இந்தியன்’ படத்தின் புதிய அப்டேட்!

ப்ளூசட்டை மாறன் இயக்கியுள்ள ‘ஆன்டி இந்தியன்’ படத்தின் புதிய அப்டேட்!

ப்ளூசட்டை மாறன் இயக்கியுள்ள ‘ஆன்டி இந்தியன்’ படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பிரபல யூடியூப் திரைப்பட விமர்சகரான ப்ளூசட்டை மாறன் தற்போது இயக்குனராகக் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ‘ஆன்டி இந்தியன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ப்ளூசட்டை மாறன் இயக்கியுள்ள ‘ஆன்டி இந்தியன்’ படத்தின் புதிய அப்டேட்!

அந்தப் படத்தில் நரேன் மற்றும் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு ஆன்டி இந்தியன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு அதிகாரிகள் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

படத்தில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க முடியாது என்று சென்சார் போர்டு அதிகாரிகள் தெரிவித்துவிட்டதாகக் கூறப்பட்டது.

ப்ளூசட்டை மாறன் இயக்கியுள்ள ‘ஆன்டி இந்தியன்’ படத்தின் புதிய அப்டேட்!

இந்நிலையில் அந்த பிரச்சினை தற்போது தீர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆம், படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். ரம்ஜான் தினத்தில் ஆன்டி இந்தியன் படத்தின் மோஷன் போஸ்டர் ப்ளூசட்டை மாறனின் யூடியூப் சேனலான தமிழ் டாக்கீஸ் சேனலில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல படங்களுக்கு தாறுமாறாக விமர்சனம் கொடுக்கும் ப்ளூசட்டையின் படம் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண மக்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர்.

Share this story