தயாரிப்பாளருக்கு உதவ, 18 ஆண்டுகளாக கடைபிடித்த முடிவை மாற்றிய அக்ஷய் குமார்…!

தயாரிப்பாளருக்கு உதவ, 18 ஆண்டுகளாக கடைபிடித்த முடிவை மாற்றிய அக்ஷய் குமார்…!

இயக்குனர் ரஞ்சித் எம். திவாரி இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பெல்பாட்டம்’. இப்படத்தில் வாணி கபூர், லாரா தத்தா, ஹூமா குரேஷி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்காட்லாண்டில் நடைபெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வரும் முதல் படம் இதுவாகும்.

தயாரிப்பாளருக்கு உதவ, 18 ஆண்டுகளாக கடைபிடித்த முடிவை மாற்றிய அக்ஷய் குமார்…!

கொரோனா பரவல் காரணமாக விமானங்கள் சேவை இல்லாததால் பிரைவேட் ஜெட் மூலம் ஸ்காட்லாந்து நாட்டிற்கு படக்குழு சென்றனர். அங்கு சென்ற பின் 15 நாட்களுக்கு மொத்த படக்குழுவும் தனிமையில் இருந்துள்ளனர். 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தாததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Bell Bottom

தற்போது இந்த நஷ்டத்தை சமாளிக்க தனது 18 ஆண்டுகால சினிமா வாழ்வில் 8 மணி நேரத்திற்கு மேல் நடிக்க கூடாது என்ற தீர்மானத்தைத் தளர்த்தி இரண்டு ஷிஃப்ட்களாக படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம். மேலும் மொத்த படக்குழுவையும் இரண்டு ஷிஃப்ட் வேலை செய்ய வலியுறுத்தியுள்ளாராம். இதை படத் தயாரிப்புக்குழு உறுதிப்படுத்தியுள்ளனர்.

Share this story