தனது படத்திற்கு தலைப்பை தேடும் பிரபல இயக்குனர்.. யாராச்சும் தெரிஞ்ச சொல்லுங்க…
இந்தியில் ரீமேக்காகும் ‘ஒத்த செருப்பு சை 7’ படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என ரசிகர்களிடம் கேட்டுள்ளார் இயக்குனர் பார்த்திபன்.
இயக்குனர் பார்த்திபன் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் வித்தியாசமாக எடுக்கப்பட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்ற திரைப்படம் ‘ஒத்தசெருப்பு சைஸ் 7’. ஒரே ஆளாக பல கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தை பெற்றார் பார்த்திபன். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது.
இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி ஒலிக்கலவையும், பின்னணி இசையை சி.சத்யாவும், ஒரு பாடலுக்கு சந்தோஷ் நாராயணனும் இசையமைத்திருந்தனர் . கடந்த 2019ம் ஆண்டு வெளியான இப்படத்தை பயோஸ்கோப் பிலிம் தயாரித்தது. மாபெரும் வெற்றிப்பெற்ற இப்படம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாக இருப்பதாக சமீபத்தில் பார்த்திபன் அறிவித்திருந்தார்.
தற்போது ஒத்த செருப்பு இந்தி ரீமேக் படத்தின் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் பார்த்திபன் கேரக்டரில் கதாநாயகனாக அபிஷேக் பச்சன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிக்க ட்ரூ லைஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்தி ரீமேக் படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என ரசிகர்களிடம் கேட்டுள்ளார். இது குறித்து இயக்குனர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒத்த செருப்பு-size 7’ ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்… என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பல பெயர்களை பதிவிட்டு வருகின்றனர்.