இந்தியில் ரீமேக்காகும் ‘ஒத்த செருப்பு’… பார்த்திபன் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் ?

இந்தியில் ரீமேக்காகும் ‘ஒத்த செருப்பு’… பார்த்திபன் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் ?

‘ஓத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் ஹீரோவாக நடிப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் ரீமேக்காகும் ‘ஒத்த செருப்பு’… பார்த்திபன் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் ?

மற்ற படங்களில் இருந்து விலகி வித்தியாசமாக உருவாகி ரசிகர்களிடையே பாராட்டை பெற்ற திரைப்படம் ‘ஒத்தசெருப்பு சைஸ் 7’. எழுத்து, இயக்கம் என மட்டுமல்லாமல், ஒரே ஆளாக பல கேரக்டரில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தார் பார்த்திபன். விமர்சன ரீதியாகயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு தேசிய விருதுகள் கிடைத்தது.

இந்தியில் ரீமேக்காகும் ‘ஒத்த செருப்பு’… பார்த்திபன் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் ?

இந்த படத்தில் ரசூல் பூக்குட்டியின் துல்லியமான ஒலிக்கலவை அனைவரின் பாராட்டையும் பெற்றது. இதேபோன்று இந்த படத்தின் பின்னணி இசையை சி.சத்யாவும், ஒரு பாடலுக்கு சந்தோஷ் நாராயணனும் இசையமைத்திருந்தனர் . கடந்த 2019ம் ஆண்டு வெளியான இப்படத்தை பயோஸ்கோப் பிலிம் தயாரித்தது. 

இந்தியில் ரீமேக்காகும் ‘ஒத்த செருப்பு’… பார்த்திபன் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் ?

சூப்பர் ஹிட்டடித்த இப்படம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாக இருப்பதாக சமீபத்தில் பார்த்திபன் அறிவித்திருந்தார். முதலில் இந்தியில் இந்த படத்தை ரீமேக் செய்ய நவாசுதீன் சித்திக்குடன் பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இறுதியாக இந்த படத்தில் பார்த்திபன் கேரக்டரில் யார் நடிப்பது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தி ரீமேக்கின் கதாநாயகனாக அபிஷேக் பச்சன் நடிக்கவிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிக்க ட்ரூ லைஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story