‘தீபிகாவைப் போல இருங்கள்’: கங்கணாவுக்கு நடிகை திவ்யா அறிவுரை!

‘தீபிகாவைப் போல இருங்கள்’: கங்கணாவுக்கு நடிகை திவ்யா அறிவுரை!

‘தீபிகா படுகோனைப் போல இருங்கள்’ என கங்கணா ரணாவத்துக்கு, நடிகை திவ்யா ஸ்பந்தனா அறிவுரை கூறியுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல், போதை மருந்து விவகாரம் ஆகிய பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. குறிப்பாக, கங்கணா ரணாவத் இந்தப் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.

இதனால், கங்கணாவுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. மும்பையில் இருந்த அவரது அலுவலகத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. ‘கங்கணாவை மும்பைக்குள் நுழையவிட மாட்டோம்’ என சிவசேனா அரசு தெரிவித்தது.

‘தீபிகாவைப் போல இருங்கள்’: கங்கணாவுக்கு நடிகை திவ்யா அறிவுரை!

இந்நிலையில், ‘தீபிகா படுகோனைப் போல் இருங்கள்’ என கங்கணாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் நடிகையும், பாஜக உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘போதை மருந்து பழக்கத்தை ஒழிக்க உண்மையாகவே ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தால், அதற்கு எதிரான போராளியாக நீங்கள் மாறுங்கள். போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாக ஏற்கெனவே நீங்கள் கூறினீர்கள்.

தைரியமாக நீங்கள் அதைச் சொன்னீர்கள். போதை மருந்து பழக்கம் குறித்து உங்கள் அனுபவம் குறித்து, அதில் இருந்து நீங்கள் எப்படி மீண்டு வந்தீர்கள் என்பது குறித்து, போதை மருந்து பழக்கம் ஏன் தவறானது என்பது குறித்து நீங்கள் வெளிப்படையாகப் பேசுங்கள்.

சஞ்சய் தத், அதைத்தான் செய்துள்ளார். உண்மையாகவே மாற்றத்தை உருவாக்க வேண்டுமென்றால், சக நடிகையான தீபிகா படுகோனைப் போல இருங்கள். மனநலம் குறித்து அவர் சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மன அழுத்தம் தொடர்பாக அவருடைய தனிப்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

அதுமட்டுமல்ல, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு உதவும் வகையில் ஒரு அறக்கட்டளையையும் நிறுவியுள்ளார். அவரிடமிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

திவ்யாவின் இந்த கருத்தை விமர்சித்து கங்கணா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Share this story