கல்விச்செலவை ஏற்கும் நேரம் இது: சோனு சூட் வேண்டுகோள்
கல்விக் கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்கும் நேரம் இது என நடிகர் சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகமெங்கும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, பலருடைய வாழ்க்கையையே அடியோடு மாற்றிப் போட்டிருக்கிறது. குறிப்பாக, பொருளாதார ரீதியாக பலர் பின்தங்கிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். சிலருக்கு வேலை பறிபோனது மட்டுமின்றி, பலருடைய ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நல்ல உள்ளம் படைத்த சிலர், தங்களால் ஆன உதவிகளை இல்லாதவர்களுக்குச் செய்து வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் நடிகர் சோனு சூட். வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப ஏராளமான உதவிகளைச் செய்தவர், வெளிநாட்டில் தங்கிப் படித்த மருத்துவ மாணவர்கள் தனி விமானம் மூலம் இந்தியா திரும்ப உதவினார்.
மேலும், மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயக் குடும்பத்துக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தது உள்ளிட்ட சோனு சூட் செய்த உதவிகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
இந்நிலையில், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்கும் நேரம் இது என தெரிவித்துள்ளார் சோனு சூட்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘கல்விக் கட்டணம் செலுத்தச் சொல்லி மாணவர்களை வற்புறுத்த வேண்டாம் என அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிடமும் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து அவர்களின் ஆன்லைன் வகுப்புகளை நிறுத்த வேண்டாம்.
அவர்கள் மீண்டுவர கால அவகாசம் தாருங்கள். இந்தச் சிறிய உதவி மூலம் பலருடைய வேலைகளைக் காப்பாற்ற முடியும். இந்தச் செயல், அவர்களையும் சிறந்த மனிதர்களாக ஆக்கும்.
குழந்தையின் கல்விக் கட்டணத்தைச் செலுத்தும் நிலையில் உள்ள பெற்றோர்கள், தயவுசெய்து உடனே கட்டணத்தைச் செலுத்துங்கள். ஆசிரியர்களும் பள்ளிகளும்
To all the parents who can afford to pay their child’s fees , please pay now. As the teachers and schools need to survive too.
— sonu sood (@SonuSood) September 28, 2020
It’s time to adopt a child’s expense who can’t afford to pay.
अभी नहीं तो कभी नहीं। 🙏
வாழ வேண்டும் என்பதால். கல்விக் கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்கும் நேரம் இது’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.