“உனக்கு நீதி கிடைக்க உன் ரசிகர்கள் எப்படி போராடுகிறார்கள் என்பதை நீ பாத்திருக்கவேண்டும்”… சுஷாந்தை நினைத்தும் உருகும் இயக்குனர்!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அவரது மும்பை இல்லத்தில் வைத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்திகள் இந்தியத் திரையுலகியே மீளாத் துயரில் ஆழ்த்தின. முதலில் தற்கொலை என்று கூறப்பட்ட மரணம் தற்போது கொலை என்னும் கோணத்தில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த போதைப்பொருள் பயன்படுத்துதல் தொடர்பான கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி போதைப் பொருள் வழக்கில் தான் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு சுஷாந்த நடிப்பில் ‘கேதர்நாத்’ என்ற படம் வெளியானது. இப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறையவடைய உள்ளது. இதனை முன்னிட்டு கேதர்நாத் படத்தின் இயக்குநர் அபிஷேக் கபூர் சுஷாந்த் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்
“கேதர்நாத் படத்தில் நாம் இருவரும் சேர்ந்து கடைசியாக நடனம் ஆடி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. நம் ஒன்றாக இருந்த அழகான நினைவுகளை நினைத்துப்பார்க்கிறேன் சகோதரா. உங்கள் ரசிகர்களால் நீங்கள் எவ்வளவு நேசிக்கப்படுகிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். உங்களை யாரும் நேசிக்கவில்லை என்று சில கெட்ட மனங்கள் உங்களிடம் சொல்லியிருக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறேன். உங்கள் ரசிகர்கள் உங்களுக்கான நீதிக்காக எப்படி போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் நான் விரும்புகிறேன். அவர்கள் உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.