சண்டை முடிந்தது… கணவருடன் மீண்டும் இணைந்த பூனம் பாண்டே!

சண்டை முடிந்தது… கணவருடன் மீண்டும் இணைந்த பூனம் பாண்டே!

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே சில தினங்களுக்கு முன்பு கணவர் மீது வன்முறைப் புகார் அளித்திருந்ததை அடுத்து தற்போது கணவருடன் மீண்டும் இணைந்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே இந்த மாத தொடக்கத்தில் சாம் பாம்பே என்பவரைத் திருமணம் செய்தார். பூனம் பாண்டே சமீபத்தில் கோவாவில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் பங்கெடுத்து வருகிறார். அதையடுத்து சில தினங்களுக்கு முன்பு பூனம் பாண்டே தனது கணவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். அவரது புகாரை அடுத்து கோவாவில் சாம் பாம்பே கைது செய்யப்பட்டார். பின்னர் சாம் ஜாமீனில் வெளியே வந்தாலும் அவர்மீது வழக்குத் தொடர்ந்து வந்தது. தற்போது பூனம் பாண்டே அந்த வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார்.

சண்டை முடிந்தது… கணவருடன் மீண்டும் இணைந்த பூனம் பாண்டே!

இதுபற்றி தற்போது பேசியுள்ள பூனம் பாண்டே, “நாங்கள் இருவரிடையே இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்கிறோம். இருவரும் இணைந்துவிட்டோம். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிக அதிகமாக நேசிக்கிறோம். எந்தத் திருமணத்தில் ஏற்ற இறக்கங்கள் இல்லை சொல்லுங்கள்?” என்று கூறியுள்ளார்.

“எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. விஷயங்கள் ஊதிப் பெரிதாக்கப்பட்டு விட்டன. திரிக்கப்பட்டன என்றே சொல்வேன்” என்று சாம் பாம்பே தெரிவித்துள்ளார்.

Poonam Pandey

ஹிந்தியில் வர உருகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூனம் போட்டியாளராகப் பங்கேற்கவுள்ளதால்தான் இதுபோன்ற சர்ச்சையை ஏற்படுத்தி விளம்பரம் தேடுகிறார் என்பதை அவர் மறுத்துள்ளார்.

தன் கணவர் தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும், கிட்டத்தட்ட பாதி கொலை என்றெல்லாம் குற்றம் சாட்டிய பூனம், தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story