என் பெயரை எப்படி நீங்கள் உபயோகிக்கலாம்… நடிகை பயல் கோஷுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை!
பாலிவுட் நடிகை பயல் கோஷ் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றம் சுமத்தியதில் தன் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நடிகை ரிச்சா சதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இயக்குனர் அனுராக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை பயல் கோஷ் குற்றம் சாட்டினார். அதில் நடிகை ரிச்சா சதாவிடமும் அனுராக் தவறாக நடந்து கொண்டதாக பயல் குறிப்பிட்டிருந்தார்.

நடிகை ரிச்சா தனது பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், தனது சட்ட உரிமைகளைத் தொடரப் போவதாகவும் கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“மிஸ்.ரிச்சா சதா எங்கள் வாடிக்கையாளர். சமீபத்தில் மூன்றாம் தரப்பினரால் எழுப்பப்பட்ட சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு தனது பெயர் தேவையல்லாமலும், போலியான உபயோகப்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டதாகவும் கண்டிக்கப்படுகிறது. உண்மையிலேயே தவறு செய்த பெண்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று எங்கள் வாடிக்கையாளர் நம்புகிறார் என்றாலும், பெண்கள் தங்கள் பணியிடத்தில் சமமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கும், அவர்கள் கண்ணியத்தோடும், சுய மரியாதையோடும் நடத்தப்படும் ஒரு நல்ல பணியிடத்தை அவர்கள் கொண்டிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் சட்டங்கள் உள்ளன. அவை பாதுகாக்கப்படுகின்றன. போலியான, தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் மற்ற பெண்களை துன்புறுத்துவதற்கு எந்தவொரு பெண்ணும் தங்கள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. எங்கள் வாடிக்கையாளர் சட்டப்படியாக தகுந்த நடவடிக்கைகளைத் தொடங்கினார், மேலும் அவரது சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் சட்டத்தில் உள்ள தீர்வுகள் அவரது நலனுக்காகக அறிவுறுத்தப்படுவார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.