ரசிகர்களின் ட்ரோலுக்கு ஆளான சல்மான் கானின் புதிய படம்!

ரசிகர்களின் ட்ரோலுக்கு ஆளான சல்மான் கானின் புதிய படம்!

சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய திரைப்படம் ராதே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியுள்ளது.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ராதே திரைப்படம் இன்று திரையரங்கு மற்றும் ZEEPLEX ஓடிடி-யில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ரசிகர்களின் ட்ரோலுக்கு ஆளான சல்மான் கானின் புதிய படம்!

அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். இப்போதெல்லாம் ரசிகர்களின் ரசனை அதிகம் மாறியுள்ளது. பழைய காலத்தைப் போல கதாநாயகன் வந்து பத்து பேரை அடித்து பறக்கவிடுவது, 1 கிலோமீட்டர் வரை அசால்ட்டாக பாய்வது போன்ற யதார்த்தத்திற்கு பொருந்தாத காட்சிகளை வெறுக்க ஆரம்பித்துவிட்டனர்.

ரசிகர்களின் ட்ரோலுக்கு ஆளான சல்மான் கானின் புதிய படம்!

எனவே இப்போது வெளியாகியுள்ள ராதே படத்தில் இது எல்லாம் இருக்கிறது. ‘ஆம்பள’ படத்தில் விஷால் காரில் பறப்பது போல புவிஈர்ப்பு விசைக்கு எதிராக காரை வானத்திற்கு பறக்கவிடுகிறார் நம் ராதே பாய். மேலும் படம் மிகவும் சுமாராக இருக்கிறது என்பதே அநேக பேரின் விமர்சனம். இதன்மூலம் ராதே ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இனி வரும் படங்கள் ரசிகர்கள் எந்தளவிற்கு முன்னேறியுள்ளனர் என்பதை மனதில் வைத்துக் கொண்டு படம் எடுக்க வேண்டும். இல்லையென்றால் ராதே பாய் கதை தான் அவர்களுக்கும்!

Share this story