“எனக்காக பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி”… எஸ்பிபி குறித்து உருக்கமான பதிவு வெளியிட்டுள்ள சல்மான் கான்!
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மிகவும் கலவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்திருந்தனர். அவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதையடுத்து எஸ்பிபி-யின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக தொடர்ந்து அப்டேட் வெளியாகி வந்தது.
இந்நிலையில் நேற்று (செப். 24) திடீரென்று எஸ்பிபி-யின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர். அதையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவரைப் பார்க்க மருத்துவமனை விரைந்ததாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது அவர் விரைவில் நலம் பெற அனைவரும் பிரார்த்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் ஸ்டார் நடிகர் சல்மான் கான் எஸ்பிபி விரைவில் குணமைடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “பாலசுப்ரமணியம் சார்.. உங்களுக்கு அனைத்து வலிமைகளை கிடைத்து விரைவில் குணமடைய என்னுடைய இதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துகிறேன். எனக்காக நீங்கள் சிறப்பாக பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி, உங்கள் தில் தீவானா ஹீரோ பிரேம், லவ் யூ சார்” என்று தெரிவித்துள்ளார்.
சல்மான் ஆரம்பத்தில் நடித்த படங்களில் எஸ்பிபி பெரும்பாலான பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.