வாரிசு அரசியல் குறித்து பேச்சு தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்படுகிறது… இயக்குனர் அனுபவ் சின்ஹா!

வாரிசு அரசியல் குறித்து பேச்சு தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்படுகிறது… இயக்குனர் அனுபவ் சின்ஹா!

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுபவ் சின்ஹா, பாலிவுட்டில் வாரிசு அரசியல் குறித்த விவாதம் தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.

தும் பின் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆனார் அனுபவ் சின்ஹா. பின்பு இவர் இயக்கத்தில் ரா ஒன், ஆர்டிகிள் 15 (Article 15), தப்பாட் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்திய நல்ல வரவேற்பைப் பெற்றன. வட இந்தியாவில் நடக்கும் சாதிய கொடுமைகளை தைரியமாக எடுத்துச் சொன்ன ஆர்டிகிள் 15 படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும் நாடு முழுவதும் பாராட்டுகளையும் பல விருதுகளையும் வாங்கிக் குவித்தது. பின்னர் டாப்சி நடிப்பில் வெளியான தப்பாட் படம் பெண்களுக்கு எதிரான ஆண்கள் அதிகாரத்தை பொட்டில் அறைந்தது போல் பறை சாட்டியது.

வாரிசு அரசியல் குறித்து பேச்சு தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்படுகிறது… இயக்குனர் அனுபவ் சின்ஹா!

சில மாதங்களுக்கு முன்பு அனுபவ் இனி பாலிவுட் படங்கள் இயக்கப்போவதில்லை என்று தெரிவித்தார். இவரின் இந்த முடிவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பாலிவுட்டை விட்டு மட்டும்தான் விலகுகிறேன். சினிமாவை விட்டு அல்ல” என்று தெரிவித்தார்.

தற்போது வாரிசு அரசியல் குறித்து பேசிய அவர் “வாரிசு அரசியலைப் பற்றிய விவாதம் தேவையில்லாமல் பெரிது படுத்தப்படுகிறது. நான் ஆரம்பத்திலிருந்தே இதைத்தான் சொல்லிக்கொண்டிக்கிறேன். வாரிசு அரசியல் எல்லா துறைகளிலும் உள்ளது. வாரிசு அரசியல் என்கிற வார்த்தையைத் தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கி வருகின்றனர்.

வாரிசு அரசியல் குறித்து பேச்சு தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்படுகிறது… இயக்குனர் அனுபவ் சின்ஹா!

திடீரென மாஃபியாக்கள் என்ற பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. இந்தத் துறையில் நான் இந்த வார்த்தையை (இதற்கு முன்)பல முறை கேட்டதில்லை. ஆம், தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாய்ப்பு தருவது, துன்புறுத்துவது எல்லா துறைகளிலும் நடைபெறுகிறது. நாம் அனைவரும் நம் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் தோழமையுடன் பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story