படமாக உருவாகும் பால்கோட் தாக்குதல்… அபிநந்தனாக நடிக்கும் விஜய் தேவரகொண்டா!

படமாக உருவாகும் பால்கோட் தாக்குதல்… அபிநந்தனாக நடிக்கும் விஜய் தேவரகொண்டா!

பாலகோட் விமானப்படை தாக்குதலை மையப்படுத்தி திரைப்படம் உருவாக இருப்பதாகவும் அதில் அபிநந்தன் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கில் பிரபல நடிகராக முன்னேறியுள்ளார். அர்ஜுன் ரெட்டி படத்திற்குப் பிறகு இவர் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது இவர் நடிக்கும் படங்களுக்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

படமாக உருவாகும் பால்கோட் தாக்குதல்… அபிநந்தனாக நடிக்கும் விஜய் தேவரகொண்டா!

தற்போது நேரடி இந்தி படங்களில் நடிப்பதற்கு தேவரகொண்டா ஆர்வம் தெரிவித்து வருகிறாராம். எனவே அவர் இந்தக் கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

Abhinandan

பாலிவுட் இயக்குனர் அபிஷேக் கபூர் இயக்கவிருக்கும் இந்தப் படத்தை சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கவுள்ளார். ஏற்கனவே சஞ்சய் லீலா பன்சாலி – அபிஷேக் கபூர் கூட்டணியில் உருவாகும் படம் பாலகோட் தாக்குதலை மையப்படுத்தி உருவாக இருப்பதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் அபிநந்தன் கதாபாத்திரத்தில்தான் விஜய் தேவரகொண்டா நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share this story