“ஒரு நடுத்தர குடும்பத்தை திறம்பட அழித்துவிட்டீர்கள்”… ரியாவின் தந்தை ஆதங்கம்!

“ஒரு நடுத்தர குடும்பத்தை திறம்பட அழித்துவிட்டீர்கள்”… ரியாவின் தந்தை ஆதங்கம்!

ரியா சக்ரபோர்த்தியின் தந்தை, தனது மகன் ஷோயிக்கை கைது செய்தது குறித்து விரக்தியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுஷாந்த் மரண வழக்கில் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் ரியாவின் தம்பி ஷோயிக் சக்ரவர்த்தி (24), ராஜ்புத்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா (33) மற்றும் சுஷாந்தின் தனிப்பட்ட ஊழியர்களில் ஒருவரான தீபேஷ் சாவந்த் ஆகியோரை என்சிபி சமீபத்தில் கைது செய்தது. மேலும் சிலரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“ஒரு நடுத்தர குடும்பத்தை திறம்பட அழித்துவிட்டீர்கள்”… ரியாவின் தந்தை ஆதங்கம்!

தனது மகன் கைது செய்யப்பட்டது குறித்து இந்திரஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில் “வாழ்த்துக்கள் இந்தியா, நீங்கள் என் மகனை கைது செய்துள்ளீர்கள், அந்த வரிசையில் அடுத்தவர் என் மகள் என்று எனக்குத் தெரியும். அதன்பிறகு யார் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் ஒரு நடுத்தர குடும்பத்தை மிகவும் திறம்பட அழித்துவிட்டீர்கள். நீதி என்ற பெயரில் எல்லாம் நியாயப்படுத்தப்பட்டுவிட்டது. ஜெய் ஹிந்த்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story