ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் டாக்டர்!?

ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் டாக்டர்!?

சிவகார்த்தியேன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. டாக்டர் திரைப்படம் மார்ச் 23-ம் தேதி வெளியாவதாக இருந்தது. அதையடுத்து தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அதையடுத்து, ரம்ஜான் தினத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்தனர்.

ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் டாக்டர்!?

தற்போது கொரோனா மீண்டும் அதிகமாக பரவி வருவதால் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. அதனால் டாக்டர் படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டாக்டர் படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். யோகிபாபு, இளவரசு, விஜே அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Share this story