பொம்மியை உருவாக்கிய சுதாவுக்கு சல்யூட்… கேப்டன் ஜிஆர் கோபிநாத் புகழாரம்!

பொம்மியை உருவாக்கிய சுதாவுக்கு சல்யூட்… கேப்டன் ஜிஆர் கோபிநாத் புகழாரம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டெக்கான் ஏர்வேஸ் நிறுவனர் ஜிஆர் கோபிநாத் சுதா கொங்கராவைப் பாராட்டியுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று‘ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் அனைவரது நடிப்பும் சிறப்பாக இருந்தது. நடிகை அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரத்தைப் பாராட்டாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம்.

பொம்மியை உருவாக்கிய சுதாவுக்கு சல்யூட்… கேப்டன் ஜிஆர் கோபிநாத் புகழாரம்!

படம் வெளியான போதே டெக்கான் ஏர்வேஸ் நிறுவனர் ஜிஆர் கோபிநாத் படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியிருந்தார்.

இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு கோபிநாத் பொம்மி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியதற்காக இயக்குனர் சுதா கொங்கராவை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “பொம்மி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியதற்காக இந்த சிறப்பு நாளில் சுதாவுக்கு வணக்கம், அபர்ணா அசாதாரண தைரியம் கொண்ட பெண்ணாக தனது சொந்த கனவுகளை நினைவாக போராடும் அதே சமயத்தில் குடும்பப்பெண்ணாகவும் சிறப்பாக பணியாற்றி அனைத்து முரண்பாடுகளையும் உடைத்தெறிந்தார். எல்லா பெண்களுக்கும் அவர்களின் சொந்தக் கனவுகளை பின்தொடர உத்வேகமாக இருந்தீர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story