பிகில் திரைப்படத்தின் அடுத்த சிங்கல் டிராக்…

பிகில் திரைப்படத்தின் அடுத்த சிங்கல் டிராக்…

 

பிகில் திரைப்படத்தின் அடுத்த சிங்கில் டிராக் ‘உனக்காக’ இன்று மாலை 4 30 மணிக்கு வெளியாக உள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹமான் இசையமைத்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் அப்பா மகன் என இரு வேடத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். தெறி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் விஜய்-அட்லீ கூட்டணியில் அமையும் இரண்டாவது படம் இது. இத்திரைப்படம் ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவணம் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிகில் திரைப்படத்தின் அடுத்த சிங்கல் டிராக்…

ஏ.ஆர்.ரஹமான், பாடகி ஷாஷா திரிபாதி  பாடிய சிங்கப்பெண்ணே, நடிகர் விஜய் பாடியுள்ள வெறித்தனம் ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரிசையில் ‘உனக்காக’ எனும் பாடலின் சிங்கில் டிராக் இன்று மாலை 4 30 மணிக்கு வெளியாகயுள்ளது.பிகில் திரைப்படத்தின் அடுத்த சிங்கல் டிராக்…

நாளை  சென்னையில் நடைபெற உள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னர் அடுத்த சிங்கல் டிராக்கையும் வெளியிட்டு ரசிகர்களை படக்குழுவினர் சந்தோஷப்படுத்தியுள்ளனர்.

Share this story