கொரானா நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கிய நடிகர் சூர்யா

கொரானா நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கிய நடிகர் சூர்யா

கொரானாவால் ஏற்பட்டுள்ள பேராபத்தை சமாளிக்க நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 1 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

கொரானா நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கிய நடிகர் சூர்யா

நாடு முழுவதும் கொரானாவின் இரண்டாவது அலையின் பாதிப்பு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்குநாள் தொற்று பாதித்தோரின் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுபாடு, தடுப்பூசி பற்றாக்குறை என பல பிரச்சனைகள் நீடித்து வருகிறது. பிரச்சனையை சமாளிக்க முடியாமல் மாநில அரசு விழிபிதுங்கி கிடக்கின்றன.

கொரானா நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கிய நடிகர் சூர்யா

கொரானாவால் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறோம். ஒருபுறம் மக்கள் கொத்துகொத்தாக பலியாகி வருகிறார்கள். இன்னொருபுறம் நிதி பற்றாக்குறையால் புதிய மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்க முடியாமல் மாநில அரசு தவித்து வருகிறது. இதை சமாளிக்க முதலமைச்சர் நிவாரண நிதி அளிக்குமாறு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

கொரானா நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கிய நடிகர் சூர்யா

இதையடுத்து முக்கிய பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் முதலமைச்சர் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். அண்மையில் சன் குழுமம் சார்பில் 30 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் இன்று நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து 1 கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

Share this story