‘வலிமை’ படத்தின் டப்பிங்கை முடித்த அஜித்!?

‘வலிமை’ படத்தின் டப்பிங்கை முடித்த அஜித்!?

அஜித் வலிமை படத்திற்கான டப்பிங்கை முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து எச்.வினோத்- அஜித் மற்றும் போனி கபூர் கூட்டணி ‘வலிமை‘ படத்திற்காக இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தின் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. வரும் மீ 1-ம் தேதி அஜித் பிறந்தநாளன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வலிமை’ படத்தின் டப்பிங்கை முடித்த அஜித்!?

தற்போது அஜித் வலிமை படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தின் முழுவடிவத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித் தன்னுடைய பணிகளைக் காலம் தாழ்த்தாமல் செய்யக்கூடியவர் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிப்பதுண்டு. தற்போது வலிமை படத்தின் வேலைகளை முடித்து அதை நிரூபித்திருக்கிறார் அஜித்.

இந்தப் படத்தின் சில ஆக்ஷன் காட்சிகளை ஸ்பெயின் நாட்டில் படமாக்க எச் வினோத் தயாராகி வருகிறாராம். இந்தப் படத்தில் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கன்னட நடிகர் கார்த்திகேயா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் முதலில் இருக்கிறது.

Share this story