அஜித் எனக்கு பைக் ஓட்ட டிப்ஸ் குடுத்தாரு… ‘வலிமை’ பட நடிகை ஓபன் டாக்!

அஜித் எனக்கு பைக் ஓட்ட டிப்ஸ் குடுத்தாரு… ‘வலிமை’ பட நடிகை ஓபன் டாக்!

நடிகை ஹுமா குரேஷி ‘வலிமை’ படம் குறித்து மனம் திறந்துள்ளார்.

அஜித்-ஹெச் வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். வலிமை படத்திற்காக இவர் பெரிய ரக பைக் ஓட்டுவதற்குக் கற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அஜித் எனக்கு பைக் ஓட்ட டிப்ஸ் குடுத்தாரு… ‘வலிமை’ பட நடிகை ஓபன் டாக்!

தற்போது ஹுமாவிடம் வலிமை படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அஜித்திற்கு இணையாக பைக் ஓட்டினீர்களா என்ற கேள்விக்கு “நான் படத்தில் நடிப்பதற்காக மட்டுமே பைக் ஓட்டக் கற்றுக் கொண்டேன். அஜித் சார் பைக் ஓட்டுவதில் கில்லாடி. அவர் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள் சொல்லிக்கொடுத்தார்” என்று தெரிவித்துள்ளார்.

அஜித் எனக்கு பைக் ஓட்ட டிப்ஸ் குடுத்தாரு… ‘வலிமை’ பட நடிகை ஓபன் டாக்!

வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா மின்னல் வேகத்தில் வலிமை படத்திற்காக இசையமைத்து வருகிறார். கூடிய விரைவில் பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

Share this story