அறிவித்த தேதிக்கு முன்னரே ஓடிடி-யில் வெளியாகும் கர்ணன்!

அறிவித்த தேதிக்கு முன்னரே ஓடிடி-யில் வெளியாகும் கர்ணன்!

கர்ணன் படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருக்கும் தேதி குறித்து அப்டேட் தெரிய வந்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய கர்ணன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் அனைவரும் படத்தை புகழ்ந்தனர். அதே சமயம் கர்ணன் படம் பல விவாதங்களையும் ஏற்பட வைத்தது குறிப்பிடத்தக்கது.

அறிவித்த தேதிக்கு முன்னரே ஓடிடி-யில் வெளியாகும் கர்ணன்!

கர்ணன் திரைப்படம் ஓடிடி-யில் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அதிகமாக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதையடுத்து கர்ணன் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது கர்ணன் ஓடிடி ரிலீஸ் குறித்து ஸ்பெஷல் அப்டேட் வெளியாகியுள்ளது. ஒரு படம் வெளியாகி 30 நாட்கள் கழித்து தான் ஓடிடி-யில் வெளியாக வேண்டும் என்று கோலிவுட்டில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். கர்ணன் படமும் அந்தக் கோரிக்கையை ஏற்று தான் தியேட்டரில் வெளியானது.

கர்ணன் ஏப்ரல் 9-ம் தேதி வெளியானது. எனவே 30 நாட்கள் கழித்து அதாவது மே 9-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் மே 9-ம் தேதிக்கு முன்னரே படம் அமேசானில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story