‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ்… இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ்… இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியில் ராஜ் மற்றும் டிகே ஆகியோரது இயக்கத்தில் மனோஜ் பாஜபாயி, ப்ரியாமணி நடிப்பில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான தி பேமிலி மேன் சீரிஸ் பெரும் வெற்றி பெற்றது. இந்த வெப் சீரிஸுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ்… இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

தற்போது இந்த வெப் சீரிஸின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா இணைந்துள்ளார். இந்த இரண்டாம் பாகத்தின் மூலம் முதன்முறையாக ஓடிடி-யில் என்ட்ரி கொடுக்கிறார் சமந்தா.

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ்… இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த பேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் 11-ம் தேதி முதல் பேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாம் பாகம் அமேசான் ப்ரைமில் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

சமந்தா முதன்முறையாக வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் இந்த இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story