தனுஷை புகழும் சிம்பு பட நடிகை!

தனுஷை புகழும் சிம்பு பட நடிகை!

ஒரு இயக்குநராக தனுஷ் தன்னை கவர்ந்ததாக சிம்பு நடித்த ‘செக்கச்சிவந்த வானம்’ பட நாயகி அதிதிராவ் ஹிதாரி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை: ஒரு இயக்குநராக தனுஷ் தன்னை கவர்ந்ததாக சிம்பு நடித்த ‘செக்கச்சிவந்த வானம்’ பட நாயகி அதிதிராவ் ஹிதாரி புகழாரம் சூட்டியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹிதாரி. இவர் தற்போது தனுஷ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

தனுஷை புகழும் சிம்பு பட நடிகை!

தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட நடிகர் தனுஷ் கடந்த ஆண்டு ராஜ்கிரன் நடிப்பில் ‘பவர் பாண்டி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது படத்தை இயக்கும் பணிகளில் தனுஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நாயகியாக அதிதிராவ் ஹிதாரி நடித்து வருகிறார். தனுஷின் படம் குறித்து பேசிய அதிதிராவ், தனுஷ் ஒரு ஷாட் வைக்கும் ஸ்டைல் பிடித்திருக்கிறது. சீன்களை விவரித்து வேலை வாங்குவது பிடித்திருக்கிறது. அவருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

தனுஷை புகழும் சிம்பு பட நடிகை!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வடசென்னை’ திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் அக்.18ம் தேதி ரிலீசாகிறது. அதைத் தொடர்ந்து கவுதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகனின் ‘மாரி 2’ உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.

 

Share this story