புற்றுநோயிலிருந்து மீண்ட பிறகே குடும்பத்தை நேசிக்க தொடங்கியுள்ளேன்: பிரபல நடிகை ஓபன் டாக்!

புற்றுநோயிலிருந்து மீண்ட பிறகே குடும்பத்தை நேசிக்க தொடங்கியுள்ளேன்: பிரபல நடிகை ஓபன் டாக்!

தன்னை பாதித்த புற்றுநோய் தன்னுடைய ஆசான். அது வாழ்வின் மதிப்பை தனக்கு கற்றுத்தந்துள்ளது என்று நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்

ஜெய்ப்பூர்: தன்னை பாதித்த புற்றுநோய் தன்னுடைய ஆசான். அது வாழ்வின் மதிப்பை தனக்கு கற்றுத்தந்துள்ளது என்று நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்

பாலிவுட் நடிகையான மனிஷா கொய்ராலா, மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, ‘இந்தியன்’, ‘முதல்வன்’, ‘பாபா’, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். பாலிவுட்டிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மனிஷா கொய்ராலா, சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். அமெரிக்கா சென்று புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

புற்றுநோயிலிருந்து மீண்ட பிறகே குடும்பத்தை நேசிக்க தொடங்கியுள்ளேன்: பிரபல நடிகை ஓபன் டாக்!

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ‘தன்னை பாதித்த புற்றுநோய் தன்னுடைய ஆசான். அது வாழ்வின் மதிப்பை தனக்கு கற்றுத்தந்துள்ளது. புற்றுநோயில் இருந்து மீண்ட பிறகு தனது குடும்பத்தை அதிகம் நேசிக்கத் தொடங்கியுள்ளேன். உடல்நலம் மீது அதிகம் கவனம் செலுத்துகிறேன்’ என்றார்.

முன்னதாக புற்றுநோய் தன்னைத் தாக்கியது, அமெரிக்க சிகிச்சை பெற்றது, அங்கு பெற்ற அனுபவங்கள், அதில் இருந்து மீண்டு வந்தது, பின்னர் இங்கு புதிய வாழ்க்கையைத் தொடங்கியது என்பனவற்றை நடிகை நீலம் குமாருடன் இணைந்து ஹீல்டு என்ற புத்தகத்தில் மனிஷா எழுதியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Share this story