புதையல் வேட்டை கதைக்களமான ‘கொற்றவை’ படத்தின் புதிய அப்டேட்!

புதையல் வேட்டை கதைக்களமான ‘கொற்றவை’ படத்தின் புதிய அப்டேட்!

தயாரிப்பாளர் சிவி குமார் தற்போது இயக்குனராகவும் களமிறங்கியிருக்கிறார். முதலில் சந்திப் கிஷன் இயக்கத்தில் ‘மாயவன்’ என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ படத்தை இயக்கினார்.

தற்போது மூன்றாவதாக கொற்றவை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் அட்வென்சர் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. முழுவீச்சில் நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது.

புதையல் வேட்டை கதைக்களமான ‘கொற்றவை’ படத்தின் புதிய அப்டேட்!

தற்போது கொற்றவை படத்தின் டப்பிங்கைத் துவங்கியுள்ளதாக சிவி குமார் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ராஜேஷ் கனகசபை, வேல ராமமூர்த்தி, அனுபமா குமார், பவன் மற்றும் கவுரவ் நாராயணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

காரைக்குடி, சென்னை மற்றும் பெரம்பலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஒரு புதையலைப் பற்றியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொற்றவை படத்தை அடுத்து மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்தை சிவி குமார் இயக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story