பேமிலி மேன் வெப் சீரிஸுக்கு சேரன் எதிர்ப்பு!

பேமிலி மேன் வெப் சீரிஸுக்கு சேரன் எதிர்ப்பு!

பேமிலி மேன் வெப் சீரிஸுக்கு இயக்குனர் சேரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம்  தி பேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த சீரிஸில் ஈழத் தமிழர்களையும் அவர்களின் போராட்டத்தையும் தவறாகச் சித்தரித்துள்ளதாகப் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

பேமிலி மேன் வெப் சீரிஸுக்கு சேரன் எதிர்ப்பு!

மேலும் ஈழத் தமிழர்கள் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுடன் இணைந்து சதி செய்வது போலவும் காண்பித்துள்ளனர். இது ஈழப் போராட்டம் குறித்த பார்வையை மாற்றிவிடும் என்று பலர் தெரிவிப்பதுடன் சீரிஸை தடை செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “எம் தமிழர் வரலாற்றை திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு??” என்றவாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

பேமிலி மேன் வெப் சீரிஸுக்கு சேரன் எதிர்ப்பு!

தற்போது இயக்குனர் சேரன் பேமிலி மேன் வெப் சீரிஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். “தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story