இணையத்தில் லீக் ஆன த்ரிஷ்யம் 2 ட்ரைலர்… அதிர்ச்சியில் படக்குழு!

இணையத்தில் லீக் ஆன த்ரிஷ்யம் 2 ட்ரைலர்… அதிர்ச்சியில் படக்குழு!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘த்ரிஷயம் 2’ படத்தின் ட்ரைலர் இணையத்தில் கசிந்தது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

த்ரிஷ்யம் 2 திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. நேற்று த்ரிஷயம் 2 படத்தின் ட்ரைலர் வரும் பிப்ரவரி 8-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து திரிஷ்யம் 2 படம் பிப்ரவரி 19-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இணையத்தில் லீக் ஆன த்ரிஷ்யம் 2 ட்ரைலர்… அதிர்ச்சியில் படக்குழு!

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் இணையத்தில் கசிந்துவிட்டது. அதை அறிந்த படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே ட்ரைலர் அறிவித்த தேதிக்கு முன்னரே வெளியிட அமேசான் ப்ரைம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Image

த்ரிஷ்யம் 2 படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதால் இந்த ட்ரைலர் லீக் படத்தின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this story