மோகன்லால், மீனா நடிக்கும் ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.!

மோகன்லால், மீனா நடிக்கும் ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. மேலும் பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல் ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. தமிழ் ரீமேக்கையும் ஜீத்து ஜோசப் தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால், மீனா நடிக்கும் ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.!

தற்போது மலையாளத்தில் இன்று முதல் ’த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மீண்டும் அதே குழு இந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றுகின்றனர். மோகன்லால் & மீனாநடிக்கும் இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார். என்றும் படக்குழுவினர் அனைவரும் கடந்த 15 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்லால், மீனா நடிக்கும் ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.!

முன்னதாக அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் சிலருக்கு கொரோனா உறுதியாகியதால் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு தற்போது மீண்டும் இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால், மீனா நடிக்கும் ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.!

Share this story