சோசியல் மீடியாவைக் கலக்கும் ‘மாநாடு’ படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சோசியல் மீடியாவைக் கலக்கும் ‘மாநாடு’ படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

மாநாடு படத்திலிருந்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அரசியல் களத்தை அடிப்படையாக வைத்து வித்தியாசமாக திரைக்கதை அமைப்புடன் வெளியாக இருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

சோசியல் மீடியாவைக் கலக்கும் ‘மாநாடு’ படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

படத்தில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தலைவர்களாக நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. தற்போது மாநாடு படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் எஸ்ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். புகைப்படங்களைப் பார்க்கும் போது எஸ்ஜே சூர்யாவும், மகேந்திரனும் அப்பா, மகனாக நடிப்பதாகத் தெரிகிறது. தற்போது இந்தப் புகைப்படம் வெளியானதை அடுத்து மாநாடு ஹாஷ்டாக் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பெற்று வருகிறது.

சோசியல் மீடியாவைக் கலக்கும் ‘மாநாடு’ படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு கடைசியாக மாலத்தீவில் நடைபெற்று வந்தது. கொரோனா அதிகரித்து வருவதால் பல படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநாடு படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் சமீபத்தில் ஏதும் வெளியாகவில்லை.

மாநாடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். ரமலான் தினத்தில் மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this story