போலீசாக சூரி, கைதியாக விஜய் சேதுபதி… வெற்றிமாறன் படத்தின் மிரட்டும் பர்ஸ்ட் லுக் வெளியானது!

போலீசாக சூரி, கைதியாக விஜய் சேதுபதி… வெற்றிமாறன் படத்தின் மிரட்டும் பர்ஸ்ட் லுக் வெளியானது!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘விடுதலை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

போலீசாக சூரி, கைதியாக விஜய் சேதுபதி… வெற்றிமாறன் படத்தின் மிரட்டும் பர்ஸ்ட் லுக் வெளியானது!

போஸ்டரில் சூரி காவலராக இதற்கு முன்னர் பார்த்திராத தோற்றத்தில் காணப்படுகிறார். மேலும் விஜய் சேதுபதியில் பர்ஸ்ட் லுக்கில் அவர் கைதியாக காணப்படுகிறார். சூரி கதாநாயகன் மற்றும் விஜய் சேதுபதி அவரது ஆசான் என்று போஸ்டரிலேயே குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் படம் எழுத்தாளர் ஜெகன்மோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு இளையாராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பவானி ஸ்ரீ, கிஷோர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தமிழ் சினிமாவில் இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பாரப்பு நிலவி வருகிறது.

Share this story