வெற்றிமாறன்- சூரி- விஜய் சேதுபதி கூட்டணியின் படத் தலைப்பு இதுதானாம்!

வெற்றிமாறன்- சூரி- விஜய் சேதுபதி கூட்டணியின் படத் தலைப்பு இதுதானாம்!

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெகன்மோகனின் ‘துணைவன்‘ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் பவானி ஸ்ரீ, கிஷோர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

வெற்றிமாறன்- சூரி- விஜய் சேதுபதி கூட்டணியின் படத் தலைப்பு இதுதானாம்!

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சூரியின் அப்பாவாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலில் இந்தக் கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா தான் நடிப்பதாக இருந்தது. பின்னர் மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்படுவதால் உடல்நிலை காரணமாக இப்படத்திலிருந்து விலகினார்.

தற்போது இந்தப் படத்திற்கு விடுதலை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விடுதலை என்ற தலைப்பில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், விஷ்ணுவர்தன் ஆகியோர் நடிப்பில் 1986-ன் ஆண்டு படம் வெளியாகியது.

வெற்றிமாறன்- சூரி- விஜய் சேதுபதி கூட்டணியின் படத் தலைப்பு இதுதானாம்!

தற்போது வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்திலும் மூன்று முக்கியக் கதாபாத்திரங்கள் இடம் பெறுவதால் படத்திற்கு விடுதலை என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளனராம்.

விடுதலை படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து உரிய உரிமைகளை பெற்று படக்குழு இந்தத் தலைப்பு பயன்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this story