அல்லு அர்ஜுன் உடன் கூட்டணி அமைக்கும் ஏஆர் முருகதாஸ்!

அல்லு அர்ஜுன் உடன் கூட்டணி அமைக்கும் ஏஆர் முருகதாஸ்!

இயக்குனர் ஏஆர். முருகதாஸ் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபகாலமாக தமிழ் இயக்குனர்கள் தெலுங்கு நடிகர்களுடன் கூட்டணி வைப்பது அதிகமாகி வருகிறது. இயக்குனர் சங்கர், ராம் சரண் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதேபோல இயக்குனர் லிங்குசாமி ராம் பொத்தினேனி இயக்கத்தில் மற்றொரு படத்தை இயக்கி வருகிறார்.


தற்போது இவர்கள் வரிசையில் ஏஆர் முருகதாஸ் நடிகர் அல்லு அர்ஜுன் வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த படத்தை அல்லு அர்ஜுனின் அப்பா பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரிக்க இருப்பதாகவும், அந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 65 படத்தை இயக்க இருந்த ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் படத்தில் இருந்து விலகினார். தற்போது இந்தியாவின் முதல் முழுநீள அனிமேஷன் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எனவே தான் அவர் டோலிவுட் பக்கம் சென்று அல்லு அர்ஜுன் உடன் படம் பண்ண இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share this story