வலிமை அப்டேட் குடுங்க அண்ணாச்சி… ஜிபி முத்துவையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்!

வலிமை அப்டேட் குடுங்க அண்ணாச்சி… ஜிபி முத்துவையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்!

வலிமை படத்தின் அப்டேட் வெளியிடுமாறு போனி கபூருக்கு ஜிபி முத்து வேண்டுகோள் விடுத்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் திரும்பிய பக்கமெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் ரகளை செய்து வருகின்றனர். இருப்பினும் வலிமை படக்குழு இந்த கோரிக்கைளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை போல.

வலிமை அப்டேட் குடுங்க அண்ணாச்சி… ஜிபி முத்துவையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்!

வலிமை படக்குழு முதலில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்த பின்னர் தான் போஸ்டர், டீசர் உள்ளிட்ட அப்டேட்கள் வெளியிடும் திட்டத்தில் உள்ளனர் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று அஜித் ரசிகர்கள் முதல்வரிடமே வலிமை அப்டேட் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியது. தற்போது அஜித் ரசிகர்கள் ஜிபி முத்துவையும் விட்டுவைக்கவில்லை.

ஜிபி முத்து வெளியிடும் அனைத்து விடீயோக்களிலும் கமெண்ட் பகுதியில் போய் வலிமை அப்டேட் கேட்டு தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வலிமை படக்குழு தயவு செய்து வலிமை படத்தின் அப்டேட் கொடுக்குமாறும், அதைக் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this story