சூரரைப் போற்று நடிகர் படத்தில் இணைந்த இளையராஜா!

சூரரைப் போற்று நடிகர் படத்தில் இணைந்த இளையராஜா!

தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடிக்கும் படத்தில் இசைஞானி இளையராஜா இணைந்துள்ளார்.

நடிகர் மோகன்பாபு டோலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் உயர் அதிகாரியாக நடித்திருந்தார்.

சூரரைப் போற்று நடிகர் படத்தில் இணைந்த இளையராஜா!

தற்போது மோகன் பாபு நடிப்பில் ‘சன் ஆப் இந்தியா (Son of India)’ என்ற படம் உருவாகி வருகிறது. தற்போது இந்தப் படத்தில் இளையராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். படத்தில் இசைக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால் இளையராஜாவை அவர்கள் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மோகன் பாபுவும் இளயராஜாவும் நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இருவரும் படத்தின் இசை குறித்து உரையாடும் வீடியோவை படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு மஞ்சு வெளியிட்டுள்ளார்.

அதில் “இரண்டு பெரும் ஆளுமைகளுடன் உருவாகும் படத்தைத் தயாரிப்பது எனக்கு கடவுள் கொடுத்த வரம். பாடலுக்கு தனித்துவமான இசையை ஆளுமையால் தான் உருவாக்க முடியும். இந்த வீடியோவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். மேலும் பாடலை உங்கள் பார்வைக்கு வைப்பது மற்றொரு கதை; நான் விரைவில் பகிர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சன் ஆப் இந்தியா (Son of India) படத்தை டைமண்ட் ரத்னபாபு இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share this story