அமேசான் பிரைமில் வெளியாகிறதா ‘வலிமை’?

அமேசான் பிரைமில் வெளியாகிறதா ‘வலிமை’?

வலிமை திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறதா என்ற கேள்வி சோசியல் மீடியாக்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர். கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் வலிமை மிக முக்கியமாக படமாக உள்ளது.

அமேசான் பிரைமில் வெளியாகிறதா ‘வலிமை’?

வலிமை படத்தின் அறிவிப்பு வெளியானத்திலிருந்து படம் குறித்த எந்த ஒரு அப்டேட்-ம் இதுவரை வெளியாகவில்லை. எனவே அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்ட வண்ணம் உள்ளனர்.

‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்தனர். இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் கொரோனா தொற்று நெருக்கடி காலத்தில் எந்தவித கொண்டாட்டங்களும் வேண்டாம் என்று படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்ததால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தற்போது சோசியல் மீடியாக்களில் #ValimaionOTT என்றஹாஷ்டாக் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர் ஒருவர் அமேசான் ஹெல்ப் ட்விட்டர் கணக்கை டேக் செய்து “வலிமை வெளியாகும் தேதி சொல்ல முடியுமா?” என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமேசான் ஹெல்ப் அதிகாரபூர்வ கணக்கு “வலிமை படம் குறித்த உங்கள் அக்கறையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். வலிமை திரைப்படம் குறித்து நாங்கள் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் புதுப்பிப்புகளுக்கு தயவுசெய்து எங்கள் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.” என்று பதிலளித்துள்ளனர்.

வலிமை படத்தின் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

Share this story