கர்ணன் படத்தின் அடுத்த பாடல் எப்போது?… வெளியான புதிய அப்டேட்..

கர்ணன் படத்தின் அடுத்த பாடல் எப்போது?… வெளியான புதிய அப்டேட்..

கர்ணன் படத்தின் மூன்றாவது பாடல் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கர்ணன்’. இந்த படத்தை ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

கர்ணன் படத்தின் அடுத்த பாடல் எப்போது?… வெளியான புதிய அப்டேட்..

தனுஷின் 41வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கௌரி கிஷன், லால், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கர்ணன் படத்தின் அடுத்த பாடல் எப்போது?… வெளியான புதிய அப்டேட்..

இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோன்று கர்ணன் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ‌பாராட்டை பெற்றது. இந்நிலையில் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ‘திரெளபதியின் முத்தம்‘ என்ற பாடல் வரும் மார்ச் 11ம் தேதி வெளியாகவுள்ளது.

Share this story