‘கர்ணன்’ டீசர் எப்போது ?… நடுங்க வைக்கும் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்…

‘கர்ணன்’ டீசர் எப்போது ?… நடுங்க வைக்கும் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்…

கர்ணன் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ஒரு மிரட்டும் போஸ்டரை வெளியிட்டு தனுஷ் அறிவித்துள்ளார்.

தனுஷின் நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவரவிருக்கிற திரைப்படம் ‘கர்ணன்’.‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கி வெற்றிப்பெற்ற மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

‘கர்ணன்’ டீசர் எப்போது ?… நடுங்க வைக்கும் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்…

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதில் கௌரி கிஷன், லால், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கர்ணன் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்ற‌ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் மார்ச் 23ம் தேதி கர்ணன் படத்தின் டீசர் வெளியாகும் என தனுஷ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு மிரட்டும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் அசுர பொம்மைகளுக்கு நடுவே கத்தியை வைத்துக் கொண்டு கர்ணன் தனுஷ் இருப்பது நடுங்க வைக்கிறது.

Share this story