ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன்... என்ன காரணம் தெரியுமா ?

nithiya meon

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்தது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வரும் இவர், தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகிறது. 

தற்போது ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். அவர் உருவாகியுள்ள பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடைபெற்றது. இதில் இதில் படத்தில் நடித்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். nithiya meon

அந்த வகையில் கதாநாயகியான நித்யா மேனன் வீல் சேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். இதைப் பார்த்து அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். உடல் நிலையில் பாதிப்பு இருந்தபோதிலும் வீல் வந்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. சமீபத்தில் நடிகை நித்யா மேனனுக்கு காலில் அடிப்பட்டுள்ளது. இதை சமூக வலைத்தளத்தில் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story