“இமை போல் காப்பேன்”…புது மனைவி ராஹிக்கு ஆரவ் வாக்குறுதி!

“இமை போல் காப்பேன்”…புது மனைவி ராஹிக்கு ஆரவ் வாக்குறுதி!

மாடலிங் துறையில் இருந்த ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு தற்போது படவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஓ காதல் கண்மணி, சைத்தான் படங்களிலும் சிறு வேடங்களில் நடித்துள்ளார். மார்க்கெட் ராஜா படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

Image

நடிகை ராஹி கவுதம் மேனன் இயக்கத்தில் ஜோஸுவா: இமை போல் காக்க படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரவ் மற்றும் ராஹி ஜோடிக்கு கடந்த 6-ம் தேதி திருமணம் முடிந்தது. இவர்கள் திருமணத்தில் பல கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

“இமை போல் காப்பேன்”…புது மனைவி ராஹிக்கு ஆரவ் வாக்குறுதி!

தற்போது ஆரவ் தனது புதுமனைவிக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். ராஹியை இமை போல் காப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஜோஸுவா: இமை போல் காக்க படத்தில் ராஹி நடித்துள்ளதால் அதை குறிப்பிடும் விதமாக ஆரவ் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.

Share this story