அமெரிக்காவில் மனைவியுடன் தனுஷ்… வைரலாகும் அழகிய புகைப்படம்…
நடிகர் தனுஷ், மனைவி ஐஸ்வர்யாவுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘கர்ணன்’ திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் நடிக்கும் திறன்கொண்ட மிகப்பெரிய நடிகன் நான் என்று சமீபகாலங்களில் வெளிவந்த படங்கள் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் தனுஷ். அசுரன் படத்தை மிஞ்சிய அசாத்திய நடிப்பை இந்த படத்தில் தனுஷ் வெளிப்படுத்தியுள்ளார். விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றிப்பெற்றுள்ள இப்படத்தை ரசிகர்களை தாண்டி, சினிமா பிரபலங்களும் வரவேற்றுள்ளனர்.
இந்தியாவில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த தனுஷ் கடல் கடந்து ஹாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். தற்போது ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதற்காக கடந்த மாதம் அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். இதையடுத்து இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை திரும்பும் அவர், டி43, செல்வராகவனின் நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார்.
அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் சென்றுள்ள தனுஷ், ஷூட்டிங்கின் நடுவே மனைவியுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்கில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் ‘கர்ணன்’ படத்தை பார்த்து ரசித்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட இப்புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்திற்கு அதிக லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.