20 ஆண்டுகள் கடந்தும் குறையாத அழகு... திரிஷாவை கொண்டாடும் ரசிகர்கள் !
நடிகை திரிஷா தமிழ் சினிமாவிற்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை காமன் டிபி வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் நீண்ட காலம் உச்ச நடிகையாக இருப்பது சிலர் மட்டுமே. அதில் மிகவும் முக்கியமானவர் நடிகை திரிஷா. துணை நடிகையாக அறிமுகமான அவர், அமீரின் 'மெளனம் பேசியதே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அவர் நடிப்பில் வெளியான கில்லி, திருப்பாச்சி, ஆறு உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டடித்தவை. தமிழை தாண்டி தெலுங்கு கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த '96' திரைப்படம் மரண மாஸ் ஹிட்டடித்தது. சமீபத்தில் வெளியான மணிரத்தினத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் அழகு பதுமையாக தோன்றியிருந்தார்.
தற்போது பொன்னியின் செல்வன் 2, சதுரங்க வேட்டை 2, ராம், தி ரோட் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷா தமிழ் சினிமாவிற்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். அதோடு காமன் டிபியை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.