கார்த்திக்கு ஜோடியாகும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்..?

karthi 29

கார்த்தியின் 29வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

‛சர்தார் -2, வா வாத்தியார்' போன்ற படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படங்களை அடுத்து 29 வது படமாக  ‛டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.karthi

1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் கடல் கொள்ளையர் கதைகளத்தில் இந்த படம் உருவாகிறது. இந்தாண்டு மே மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் ஆகியுள்ளார் . இவரை தொடர்ந்து இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவர் தமிழில் ஹீரோ, மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‛ஜீனி' படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story

News Hub