அபர்ணதி நடிக்கும் 'வெஞ்சென்ஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

abarnathi

அபர்ணதி நடிக்கும் 'வெஞ்சென்ஸ்' படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 
 
சின்னத்திரையில் ஆர்யா கலந்துக் கொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து 'தேன்','ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இறுகப்பற்று திரைப்படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. 


இந்நிலையில், அபர்ணதி அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வெஞ்சென்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராகுல் அசோக் இயக்குகிறார். அருண் ராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏசி புரொடக்சன் தயாரிக்கும் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this story