ஜப்பான் திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய அசுரன், கைதி, சில்லுக்கருப்பட்டி!

ஜப்பான் திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய அசுரன், கைதி, சில்லுக்கருப்பட்டி!

ஜப்பான் நாட்டில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு இந்த விருது விழா மார்ச் 27 மற்றும் மார்ச் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தற்போது இந்த விழாவில் விருது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் பல விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் முறையே அசுரன், தனுஷ், வெற்றிமாறன் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. இயக்குனர் ஹலிதா ஷமீம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படம் என்ற பிரிவில் ‘சில்லுக்கருப்பட்டி’ படத்திற்கான விருதை வென்றுள்ளார். மற்றும் இந்தப் படத்தில் நடித்ததற்காக சுனைனாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது. ‘கைதி’ படத்திற்காக அர்ஜுன் தாஸுக்கு சிறந்த வில்லனுக்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதை கைதி படத்திற்காக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Share this story