சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் BTS Comic Epi 10 ரிலீஸ்...!

retro

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் BTS Comic Epi 10 வெளியாகி உள்ளது. 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

retro

 மே 1-ம் தேதி வெளியாகவுள்ள  ‘ரெட்ரோ’ படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், கண்ணாடி பூவே, கனிமா, தி ஒன் ஆகிய பாடல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  



படத்தின் படப்பிடிப்பு காட்சியை படக்குழு காமிக் வடிவத்தில் வாரவாரம் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் காமிக்கின் 10-வது எபிசோட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. Offscreen Magicians of RETRO! என்ற தலைப்பில் இந்த வாரம் BTS Comic வெளியிடப்பட்டுள்ளது.  வரும் 18ஆம் தேதி ரெட்ரோ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this story