நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லீக்கு- சீரியல் நடிகை சங்கீதாவுடன் டும்…டும்…டும்…

photo

பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லீ, சீரியல் நடிகை சங்கிதாவை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

photo

கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக சினிமாவுக்குள் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லீ. தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் -டாக்டர், சந்தானத்துடன் -ஏ1, டிடி ரிட்டன்ஸ், விஜய்யின்- பீஸ்ட், சூப்பர் ஸ்டாரின்- ஜெயிலர், சதீஸ் உடன்- கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரது தனித்துவமான  உடல்மொழி, டயலாக் டெலிவரிக்காகவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் இன்று சீரியல் நடிகை சங்கீதாவை அவர் திருமணம் முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் தம்பதிக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

photo

Share this story