அதிதி ராவ் - சித்தார்த் ஜோடியிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

அதிதி ராவ் - சித்தார்த் ஜோடியிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

பாலிவுட்டில் பிசியான நடிகையாக இருப்பவர் அதிதி ராவ் ஹைதரி. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து மீண்டும் இரண்டாவது முறையாக மணிரதனனின் ‘செக்கக் சிவந்த வானம்’ படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதன்பிறகு தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் பெரிதாக நடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளியில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘சைக்கோ’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்தார். அதேபோன்று விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

அதிதி ராவ் - சித்தார்த் ஜோடியிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

இந்நிலையில் அதிதியும் சித்தார்த்தும் மாக சமுத்திரம் படத்தில் நடித்தபோது, காதலில் விழுந்துள்ளனர். அதன்பின் பெரும்பாலான இடங்களில் இருவரும் சேர்ந்து இணைந்து சுற்றினர். தாங்கள் இருவரும் காதலிப்பதை வெளிப்படையாக சொல்லாமல், இருக்கின்றனர். ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்களா, இல்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Share this story