ஓடிடி தளத்தில் வௌியாகியும் திரையரங்கில் 75 நாட்களை கடந்த இறுகப்பற்று
Tue Dec 19 2023 10:37:43 AM

'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்' மற்றும் 'டாணாக்காரன்' உள்ளிட்ட படங்களை தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோவின் அடுத்த தயாரிப்பு ‘இறுகப்பற்று’. யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களஇல் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல் வரிகளை எழுதியுள்ளார். இத்திரைப்படம் கடந்த 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாள் முதலே நல்ல வரவேற்பை பெற்றது.
படம் ஓடிடி தளத்திற்கு வந்த பிறகும் கூட, திரையரங்குகளில் 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.