ஜெயிலர் மேக்கிங் காணொலி வெளியீடு

ஜெயிலர் மேக்கிங் காணொலி வெளியீடு

ரசிகர்களின் ஏகோபித்த ஆதவிற்கு மத்தியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் வெளியான   இந்த படத்தில்  சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையில் தரமான பாடல்கள் வெளியானது. ஜெயிலர் ரசிகர்களை சிறைபிடிப்பாரா என காத்திருந்த அனைவருக்கும்  தரமான விருந்தாக படம் அமைந்தது. படம் வெளியான முதலேயே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. மேலும், படம் ரூ. 600 கோடி வரை வசூல் செய்து சாதனை படத்தது.

null


இதைத் தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகமும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் மேக்கிங் காணொலியை படக்குழு பகிர்ந்துள்ளது. இது வைரலாகி வருகிறது

Share this story