100 மில்லியன் பார்வைகளை கடந்த தங்கலான் படத்தின் "மினிக்கி மினிக்கி " பாடல்

ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான தங்கலான் படத்தின் “மினிக்கி மினிக்கி ” பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை. இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. `தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
Minikki Minikki Video Song Crossed 100M+ Views❤️ countless memories, and an endless soundtrack 🎶
— Studio Green (@StudioGreen2) February 2, 2025
Thank you for vibing with every step of the way!
▶️https://t.co/XLDpXY2CNG@Thangalaan @chiyaan @GnanavelrajaKe #StudioGreen @officialneelam @parvatweets @MalavikaM_… pic.twitter.com/oBivo2NZTs
கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக இது அமைந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான தங்கலான் படத்தின் “மினிக்கி மினிக்கி ” பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இது குறித்த பதிவை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.